கடலுக்குள் கிடக்கும் வேற்றுகிரக வாசியின் வாகனம் !

பால்டிக் கடல் முரண்பாடு (paltic sea anomoly )

கடந்த 2012 ஆண்டு, கடலடி ஆராய்சிகளை செய்யும் 'ocean x' என்கிற ஆய்வுக்குழுவினர், பால்டிக் கடலில் எதேச்சையாக குதித்தபோது அவர்களே நினைக்கவில்லை, அங்கொரு பொக்கிஷம் கிடைக்கும் என.

'ocean x'  திறமைவாய்ந்த டைவர்ஸ் இருவர், பால்டிக் கடலுக்கடியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, சுமார் 300 அடி ஆழத்தில், 200 அடி அகலமான ஒரு பொருள்  தென்பட்டது! சிக்கலான ஆனால் ஒழுங்கான தோற்றத்துடன் எதோ ஒன்று கிடந்தது.

பார்க்க ஏதோ வாகனம் போல தெரிய, அதிலிருந்து கொஞ்சம் மாதிரியை சேகரித்துக்கொண்டு திரும்பியது ocean x டீம். சுரண்டி எடுக்கப்பட்ட அந்த உலோகத்தை கார்பன் டேட்டிங்க்கு உட்படுத்த, ஆய்வாளர்கள் அதிர்ந்து போனார்களாம்.. காரணாம்,  அதன் வயது சுமார் 1,40,000 வருடங்கள்!

வேற்றுக்கிரகவாசிகள் (சித்தரிக்கப்பட்டது)

இதன்பின் அதன்பொருட்டு இன்னும் சில கணிப்புகள் பரவ, தொடர் ஆராய்ச்சியில் அது எதோ ஒரு வேற்றுகிரகவாசிகளின் வாகனம்தான் என ஓஷன் எக்ஸ் டீம் அறிவித்தது, பிரச்சினை பற்றிக்கொள்ள... ஹாலிவுட் படமான ஸ்டார் வார்சில் வரும் வேற்றுக்கிரக வாசியின் வாகனமும் இதை போலவே உருவ ஒற்றுமையுடன் இருப்பதைக்கண்ட நம்மாட்கள் இரண்டையும் சேர்த்துக் குழம்பி,  படத்தில் வரும் வேற்றுக்கிரக வாசியின் வாகனமும், கடலுக்கடியில் கிடக்கும் வாகனமும் ஒன்றுதான் என அடித்துவிட...

அந்த மர்மப்பொருள் தலைப்புச்செய்தியானது...

ஒரு கோஷ்டி, வேற்றுகிரக வாசிகள் காலப்பயணம் செய்து என்றோ பிற்காலத்தில் இருந்து ஐஸ் ஏஜ் என்று சொல்லப்படும் ஆரம்ப காலத்திற்கு வந்திருக்கலாம், வந்த இடத்தில் அவர்களுடைய வாகனம் விபத்துக்கு உள்ளாகி கடலில் வீழ்ந்துவிட்டது என அடித்துவிட்டார்கள்.

ஸ்டார்வார்ஸ் படத்தில் வரும் வேற்றுக்கிரகவாசியின் வாகனம் (சித்தரிக்கப்பட்டது)

இன்னொரு கோஷ்டி, கதைகளில் வரும் பழங்கால கிரேக்க நகரமான அட்லாண்டீஸ்தான் இது, கிரேக்க கட்டடக்கலையின் மிச்சம்தான் கடலுக்கடியில் உள்ள அந்த வடிவம் என்றெல்லாம் சண்டை போட! கடைசியாக களம் இறங்கிய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள். அதெல்லாம் இல்லை. எல்லாம் கட்டுக்கதை அது எரிமலை குளம்புதான். ஒரே இடத்தில் பொங்கிவந்த எரிமலை குளம்பை மேலுள்ள பனிப்பாறைகள் அப்படியே அனைத்து அதை அடக்க, அது படிப்படியாக அந்த வடிவத்துக்கு வந்துவிட்ட்டதாக அறிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில் அது, இரும்போ அல்லது ஏதாவது ஒரு உலோகமோ அல்ல, அது சுத்தமான கிரானைட் பாறை என்று அறிவித்தனர்.  ஆனால் ஓஷன் எக்ஸ் டீம் அதை ஏற்கவில்லை, முழுமையாக மறுத்துவிட்டது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க இன்னமும் இது பறக்கும் தட்டின் ஒரு பகுதிதான் என்று சூடமணைத்து சத்தியம் செய்யும் ஆட்களும் உண்டு, அவர்கள் அதற்கான ஆதாரங்களை அடுக்குகின்றனர்.

இல்லையில்லை.. எல்லாம் கட்டுக்கதை நாங்கள் சொல்வதுதான் உண்மை Fictional Island எனக்கூறப்படும் கற்பனை கண்டமான அட்லாண்டீஸ்தான் இது. அது கற்பனை கண்டமல்ல.. உண்மையான இடம்தான் என்று வாதாடிக்கொண்டிருக்கிறது ! இதுவரை உண்மை தெரியவில்லை..!

இதைச்சார்ந்த மேலும் சில ஆதாரமற்ற வதந்திகள் :

மூழ்கிக்கிடக்கும் அந்த வேற்றுக்கிரக வாசிகளின் வாகனத்தில் இருந்து இன்னமும் ரேடியோ சிக்னல்கள் வருகிறதாம், அது மேலே செல்லும் கப்பல்களின் சிக்னல்களை சிலநேரம் குழப்புகிறது என்கிறார்கள் !

அதைக்கடந்து போகும்போது எல்லா எலெக்ட்ரிக் சிக்னல்களும் கட்டாகிரதாம், சேட்டிலைட் போன்கள் வேலை செய்வதில்லையாம் ! ( வேற்றுகிரக வாசிகளின் வாகனத்தை நேரில் பார்த்ததாக பதிவாகியுள்ள 99% கேஸ்கள் அந்த வாகனத்தை பார்த்தபோது மின்சாரம் தடைபட்டு வண்டி எஞ்சின்கள் தானாகவே அணைந்தது என்றும் அந்த பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டுவிட்டது என்றும் விவரித்துள்ளனர், இதையும் கணக்கில் கொள்ள வேண்டும் ! )

எது எப்படியோ, இன்னமும் விடை தெரியாத மர்மமாக தூங்கிக்கொண்டிருக்கிறது பால்டிக் கடல் மர்மபொருள் !