ரத்தக்காட்டேரிகள் - DRACULA
ட்ராகுலாக்கள் என்றால் என்ன? அது உண்மையா?
சிலர் ட்ராகுலாக்கள் என்கிறார்கள், சிலர் வேம்பயர்கள் என்கிறார்கள், இரண்டும் ஒன்றா?

வாம்பையர் வௌவால்
வேம்பயர்களும் ட்ராகுலாக்களும் ஒன்றல்ல. ட்ராகுலாக்கள் என்பது இறந்துபோன மனிதன் ரத்தவெறி பிடித்த பேயாகி எழுந்துவருவது. ஆனால், வேம்பயர்கள் என்பது இரத்தத்தை குடிக்கும் ஒருவகை வௌவால்களின் பெயர். “ப்ராம் ஸ்டோக்கர்ஸ்” என்னும் எழுத்தாளர் 1800 களில் “டிராகுலா” கதையை எழுதும்போது, அந்த வௌவால்களின் குணத்துடன் டிராகுலா குணமும் ஒத்துப்போவதால் (கடித்ததே தெரியாமல் கடித்து இரத்தத்தை உறிவது) கவர்சிகரமாக அந்த பெயரை சூட்டினார்.

டிராகுலா
அடுத்த கேள்விக்கு வருவோம். ட்ராகுலாக்கள் உண்மையா? அதற்குமுன் கீழே நான் குறிப்பிட்டுள்ள உரையாடலை படித்துப்பாருங்கள்...
-----------------------------------------------
“ அன்புள்ள டேவிட்...
நான் ஜோனத்தன், நான் ட்ராகுலாவாக மாற கடுமையாக முயற்சித்துக்கொண்டு இருக்கிறேன்.. ஏற்கனவே இதற்காக பல கோடிகள் செலவு செய்துவிட்டேன்...! பட் என்னால் மாற முடியவில்லை... எப்படியாவது என்னை ட்ராகுலாவாக மாற்றுங்களேன் ப்ளீஸ்!
உங்களிடம் வந்து ட்ராகுலாவாக மாறிய சில நண்பர்கள் எனக்கு உங்களை பற்றி சொன்னார்கள்.. எவ்வளவு செலவானாலும் சரி.. நான் தயார்..! ஆவன செய்யவும்...
நன்றி.
ரத்த தாகத்துடன்
ஜோனத்தன்...’
--------------------------------------------------
‘அன்பு ஜோனத்தனுக்கு,
உங்கள் ஆர்வம் புரிகிறது... ஆனால் தற்போது ஏகப்பட்ட விண்ணப்பங்கள் குவிந்து கிடப்பதால் நீங்கள் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்,
என்னிடம் டிராகுலாவாக மாற பெரியதாக செலவு செய்ய வேண்டியதில்லை... பட் நான் சொல்வதை சரிவர கேட்டு நீங்கள் எனக்கு ஒத்துழைப்பை நல்க வேண்டும். இதோ என் மின்னஞ்ச்சல் முகவரி draculadavid@draculamail.com மீதத்தை இதில் பேசிக்கொள்ளலாம்.
நன்றி,
இரத்தக் குடிகாரன்
டேவிட் டிராகுலா”
-------------------------------------------------
மேலே நான் குறிப்பிட்டுள்ள கடிதத்தை பார்த்தால், உங்களுக்கு காமெடியாக இருக்கலாம்... “என்னடா இது இவன் லூசா நாம லூசா” என்று தோன்றலாம்.. ஆனால் இது உண்மை. இப்படி நிறைய வெப்சைட்கள் உண்டு. கூகுளில் “How to become a Dracula” என டைப் பண்ணி பாருங்க.. இதைவிட பெரிய காமெடிகள் கிடைக்கும்.
ஹூம்... இப்போதெல்லாம் ட்ராகுலாக்கள், வெப்சைட், ஈ மெயில் என வேறு ஒரு ரேஞ்சிக்கு போய்விட்டது...
அறிவில் சிறந்தவர்கள் என நாம் வாய்பிளந்து பார்க்கும் மேலைநாட்டவர்கள் கூட ட்ராகுலாவை நம்புகிறார்கள் என்பதற்கு உதாரணம்தான் மேற்கண்ட கடிதம்... உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நம்புவது மட்டுமல்ல, ட்ராகுலாவாக மாற அவர்கள் செலவழிக்கும் தொகை மிகப்பெரியது. ஏனெனில் ட்ராகுலாக்களின் கவர்ச்சியும், அழிவில்லாத வாழ்க்கையும் நம் மக்களை அதன்பால் ஈர்க்கிறது.
எங்கோ படித்தது, சரியாக நினைவில்லை.. பட் மேட்டர் உண்மை. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் உள்ள இளம்பெண்களிடம் ஒரு சின்ன சர்வே எடுத்தார்கள். ட்ராகுலாக்களுடன் உறவு கொள்ள விரும்புவீர்களா என, கிடைத்த ரிசல்ட், இதுதான் 60% பெண்கள் “ஆமாம் விரும்புகிறோம்” என்று பதிலளித்துள்ளனர். கொடுமை..! நம்மூர் சென்டிமென்ட் கிராமத்து ஹீரோயின்கள் சொல்வார்கள் “மாமா ஒருநாள் வாழ்ந்தாக்கூட அது உன்கூட வாழ்ந்துட்டு சாகனும் மாமா” அப்டீன்னு! அதேபோலத்தான் அமெரிக்க ஐரோப்பிய பயபுள்ளைங்க சொல்லிருக்காங்க. இப்ப யோசிங்க? ட்ராகுலாவா மாறுவது ஒர்த்தா இல்லையா?
சரி இதையெல்லாம் விட்டுவிட்டு விஷயத்துக்கு வருவோம்... ட்ராகுலாக்கள் உண்மையா? ஆமாம்... உண்மையான டிராகுலா ஒரு அரசன். அவர் பெயர் “வ்ளாட் தி இம்பேளர் (Vlad the Impaler)” அவருக்கு ஏன் டிராகுலா என்கிற பட்டம் கிடைத்தது...? வாருங்கள் சாரட் வண்டியில் ஏறி ருமேனியாவிற்கு செல்வோம். ஏனெனில் டிராகுலாவின் சொந்த ஊர் அதுதான்...

வ்ளாட் டிராகுலா என்கிற வ்ளாட் த இம்பேளர்
வருடம் 1431 இன்றைய ருமேனியாவில் உள்ள, ட்ரான்சில்வேனியா என்கிற ஊரில்தான் “வ்ளாட் தி இம்பேளர்” பிறந்ததார். (Vlat III) மூன்றாம் வ்ளாட் என்றும் அழைக்கப்படுவார். அவருடைய அப்பா பெயர் இரண்டாம் வ்ளாட், அவருக்கு பிறந்த முதல் பிள்ளைதான் நம்ம கட்டுரையின் ஹீரோ வ்ளாட் தி இம்பேளர்!
இரண்டாம் வ்ளாட் வீரத்தில் சிறந்தவர் என்பதாலும், ஈவு இரக்கமின்றி எதிரிகளை வேரருப்பவர் என்பதாலும் ஹங்கேரி மன்னர் ஒருவர் இரண்டாம் வ்ளாட்க்கு “டிராகன்” என்று பட்டப்பெயர் கொடுத்தார். அது மருவி ட்ராகுல் ஆகி, பின் டிராகுலா ஆனது.
வ்ளாட் த இம்பேளர், டிராகன் பட்டம் பெற்ற இரண்டாம் வ்ளாட்டின் மகன் என்பதால் (Son of Dracul) “வ்ளாட் டிராகுலா” என்று அழைக்கப்பட்டார். அவருக்கு டிராகுலா என்கிற பெயர் வந்தது இதனால்தான். இரண்டாம் வ்ளாட் ஆட்சி நன்றாக போய்க்கொண்டிருந்த சமயத்தில் துருக்கியுடன் போர் மூண்டது. உக்கிரமாக நடந்த போரில் இரண்டாம் வ்ளாட் தோற்று பின்வாங்கினார்.
தோல்வியில் துவண்டு கிடந்தவரை துருக்கி சுல்தான் ஒட்டோமன் சமாதான பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைக்க. அவரை நம்பி, தன் மகன்களுடன் பேச்சு வார்த்தைக்கு சென்ற “இரண்டாம் வ்ளாட்” தந்திரமாக சிறைபிடிக்கப்பட்டார். பெரிய நம்பிக்கை துரோகம் இல்லையா! சில கண்டிஷன்களை சொல்லி, இரண்டாம் வ்ளாட்டின் மகன்களை பிணைகைதிகளாக பிடித்துவைத்துக்கொண்டு, இரண்டாம் வ்ளாட்டை துருக்கி சுல்தான் விடுவித்தார்.
அப்போது துருக்கிக்கும், ஹங்கேரிக்கும் இடையில் நடந்த போரில் துருக்கிக்காக போரிட இரண்டாம் வ்ளாட் அனுப்பி வைக்கப்பட்டார். சூழ்ச்சியிலும், தன்னை சுற்றியுள்ளவர்கள் தந்திரத்தாலும் அப்போரில் இரண்டாம் வ்ளாட் கொல்லப்பட, வ்ளாட் ட்ராகுலாவும், அவரது தம்பியும் அநாதையானார்கள். அப்போது வ்ளாட்டின் வயது 13.
வருந்தி மனம் மாறிய சுல்தான், வ்ளாட்டின் இரண்டு மகன்களையும் நன்கு படிக்க வைத்தார். நன்றாக பார்த்துக்கொண்டார். ஆனாலும் வ்ளாட் மனதில் மட்டும், அப்பா மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணம் துளிர்த்துக்கொண்டே இருந்தது.
இன்னொருபுறம், பிறப்பால் கிருஸ்துவனாக பிறந்த வ்ளாட் டிராகுலா மீதும், அவரது தம்பி மீதும் இஸ்லாமிய மதத்தை திணித்தார்கள். மொழி தெரியாது, அவர்கள் கலாச்சாரம் தெரியாது, இஸ்லாம் மதத்தை பற்றி எதுவுமே தெரியாது, ஆனால் அதை தழுவி வாழ்ந்தால்தான் உயிர்வாழ முடியும் என்கிற சூழல். அது வ்ளாட் மனதில் தீராத பகையை உருவாக்கியது. வன்மம் கொழுந்துவிட்டு எரிந்தது.
மற்றவர்கள் ஏச்சும், பேச்சும் வ்ளாட் டிராகுலா மனதில் இருந்த கொடூர மிருகத்துக்கு தொடர்ந்து தீனி போட்டுக்கொண்டே இருக்க... தனக்கான நேரத்துக்காக காத்திருந்தார். இஸ்லாமியத்தை தழுவினால் அரியணை திரும்ப வ்ளாட்டுக்கே கொடுக்கப்படும் என்று சுல்தான் ஒப்பந்தம் போட்டார். அரியணை கிடைக்கும்வரை அமைதியாக இருந்த வ்ளாட் டிராகுலா அரியணை ஏறியதும் அவர் செய்த கொடூர செயல்களை எழுத்தில் விவரிக்கவே முடியாது.
அப்போது வ்ளாட் டிராகுலாவுக்கு இரண்டு வகையான எதிரிகள், ஒன்று துருக்கியில் நம்பிக்கை துரோகம் செய்ததால்தானே அவர் தந்தை இறந்தார்.. அதனால் துருக்கியில் இருப்பவர்கள் எல்லோருமே வ்ளாட் ட்ராகுலாவுக்கு எதிரிகளானர்.
இரண்டாவது எதிரி, தன் சொந்த நாட்டு மக்கள்... நம்பிக்கையானவர்கள் என அப்பா நினைத்த பெரிய மனிதர்களில் சிலர் கூடவே இருந்து தன் தந்தைக்கு குழி பறித்துவிட்டார்கள் என்கிற செய்தி அவர் காதுகளுக்கு வந்தது. தவிர தன் தந்தை உயிருடன் புதைக்கப்பட்டார் என்கிற செய்தியும் அவரை துடிதுடிக்க வைத்தது. பிற்காலத்தில் சாகும்வரை சிறுக சிறுக சித்திரவதை செய்து இவர், மற்றவர்களை கொல்ல காரணம்கூட, இதுதான் என்கிறார்கள்
அதிகாரத்துக்கு வந்தபின், பழிவாங்கல் படலத்தை தொடங்கினார் வ்ளாட்...! முதலில் சொந்த நாட்டில் உள்ள துரோகிகளை களை எடுப்போம் என முடிவு செய்தவர், தந்தையை எதிரிக்கு காட்டிக்கொடுத்த பெரிய மனிதர்களை பழிவாங்க நினைத்தார். அதில் ஒரு சின்ன குழப்பம்... ஊரில் கிட்டத்தட்ட 500 பெரிய மனிதர்கள் இருக்க.. அதில் யார் யார் தவறானவர்கள் என்று வ்ளாட்டுக்கு தெரியவில்லை...
ஒருநாள். அத்தனை பெரிய மனிதர்களையும் அரண்மனையில் ஒரு விருந்து என வரவழைத்தார். வந்தவர்களில் முகபாவனையை வைத்து யார் யார் அப்பாவுக்கு துரோகம் செய்தார்கள் என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை...! கோபம் தலைக்கேற... அப்போதுதான் அவருக்குள் இருந்த குரூர மிருகம் வெளிவந்தது. விருந்தின் முடிவில் மிகப்பொறுமையாக, அங்கு வந்திருந்த 500 பேரையும் கழுவில் ஏற்ற உத்தரவு பிறப்பித்தார்.
அந்த படுகொலைகளுக்கு பின் யாரும், அவரை கேள்வி கேட்கவே பயந்தார்கள்.. அவர் என்ன சொன்னாலும் தலையாட்டும் ஆட்கள் அவரை சுற்றி நிறைந்தார்கள்... வ்ளாட் டிராகுலா செய்த கொடுமைகளை வாசிக்கக்கூட ஒரு தைரியம் வேண்டும். மன தைரியம் இல்லாதவர்கள் அடுத்து நான் சிகப்பு கலரில் கொடுத்துள்ள பாராக்களை தயவுசெய்து தவிர்க்கவும். இதை கொடுப்பது கூட அந்த கொடூரத்தில் 5 சதவீதமாவது தெரிந்தால்தான் வ்ளாட்டை முழுமையாக புரிந்துக்கொள்ள முடியும் என்பதால்...
முதன் முதலில் வ்ளாட் டிராகுலா விருந்துக்கு அழைத்த 500 பெரிய மனிதர்களும் கழுவில் ஏற்றப்பட்டு உயிருக்காக துடித்துக்கொண்டிருந்த வேளையில், வ்ளாட் வெறிச்சிரிப்புடன் அவர்கள் இரத்தத்தை ஒரு கோப்பையில் அள்ளி பருகினார். அவர்கள் உடலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட சதையை ரொட்டி துண்டு போல ஒரு தட்டில் வைத்து இரத்தத்தில் தோய்த்து சாப்பிட்டார்.... சுற்றி நின்றவர்கள் மிரண்டு போனார்கள்...
\
கழுவில் ஏற்றப்பட்ட மனிதர்கள் ( சித்தரிக்கப்பட்ட படம் )
அதன்பின், வ்ளாட் விருந்துக்கு அழைத்தார் என்றாலே விருந்துக்கு செல்பவர் உயிரோடு திரும்ப வரமாட்டார் என்று அர்த்தம், ஒருமுறை அவர் விருந்துக்கு அழைத்த 5 பேர் கண்முன், அவர் என்ன செய்தார் என்று அவர்கள் கண்ணிலேயே பார்ப்போம்...
“ நிறைய கூர்மையான கம்பங்கள், அதில் உடல்கள் செருகப்பட்டு அந்த உடல்கள் துடிதுடித்துக்கொண்டு இருக்கிறது... நடுநாயகமாக வ்ளாட் டிராகுலா அமர்ந்திருக்கிறார்.... நாங்கள் நடுங்கியவாறு அருகில் செல்கிறோம்... சைகையால் அமர சொல்கிறார்... மிக இயல்பாக சிரிக்கிறார்... எங்கள் கை கால்கள் நடுங்குகிறது... ஐயோ..! துடிக்கும் உடல்களில் இருந்து பீறிட்டு அடிக்கும் இரத்தத்தில் அவர் உடைகள் நனைந்துகிடக்கிறது, அவர் வாயிலும் முகத்திலும் ரத்தம் வழிகிறது... மிக சாவகாசமாக ஒரு ரொட்டித்துண்டை எடுத்து பக்கத்தில் கோப்பையில் வைத்துள்ள இரத்தத்தில் நனைத்து சாப்பிடுகிறார்...

வ்ளாட் டிராகுலா காலத்தில் வரையப்பட்டு அச்சிடப்பட்ட ஒரிஜினல் படம்
இன்னொரு பக்கத்தில் ஒரு பெரிய பாத்திரத்தில் இரத்தம் ஊற்றி அதில் மனித மாமிசம் ஊறவைக்கப்பட்டுள்ளது. விக்கித்துப்போய் நிற்கிறோம் “ இப்படியாக அவர்கள் வர்ணனை தொடர்கிறது.
உயிரோடு தோலை உரித்து இரத்தத்தை பருகுவது, கொதிக்கும் தண்ணீரில் உயிருடன் மனிதனை வேக வைப்பது, இரக்கமின்றி குழந்தைகளை கொல்வது, குற்றவாளி என முடிவுசெய்யப்பட்ட ஒருவரை கொன்று அந்த உடலை சமைத்து அவர் குடும்பத்தினரை சாப்பிட வைப்பது, என நீண்டுக்கொண்டே போகும்...

ஒருமுறை அரண்மனைக்கு வந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர், அரண்மனை முழுக்க கிடந்த அழுகிய சடலங்களை பார்த்து முகம் சுளித்தார், அப்போது வ்ளாட் டிராகுலா அவரை பார்த்து கனிவாக கேட்டார் “ஏன் உங்களால் இந்த துர்நாற்றத்தை சகித்துக்கொள்ள முடியவில்லையா?” என்று. அதற்கு அவர் “ஆமாம்” என்று சொல்ல, குரூரமாக சிரித்த வ்ளாட், மிக மோசமாக நாற்றமடிக்கும் அழுகிய பிணங்களின் பக்கத்தில் அவரை கழுவில் ஏற்றினார். உயிர் போகும் வலி வேதனை ஒருபுறமும், அழுகிய சடலங்களின் நாற்றம் மற்றொருபுறமும் அவரை சித்திரவதை செய்து கொன்றது.
எதிரிகளை கொல்ல அவர் உபயோகப்படுத்திய வழிமுறைகளை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது..! பெரும்பாலான மன்னர்களிடம், எதிரிகளை சித்திரவதை செய்து கொல்லும் இந்த குரூரம் உண்டு, அந்த கணக்கில்தான் வ்ளாட்டை மற்றவர்கள் பார்த்தார்கள். தந்தை கொலைக்கு, தனக்கு இழைத்த துரோகங்களுக்கு அவர் இவ்வாறு கொடூரமாக நடந்துக்கொள்கிறார் என்று நினைத்தார்கள்.
ஆனால், கொன்றவர்கள் ரத்தத்தை வ்ளாட் குடிக்க ஆரம்பித்த பிறகுதான் காட்சிகள் மாறியது... காரணமின்றி படுகொலைகள் செய்ய ஆரம்பித்தார். சொந்த நாட்டு மக்களையே கொத்து கொத்தாக கொன்றார்.. ஒவ்வொரு கொலையும் ஒவ்வொரு விதமாக ரசித்து அனுபவித்து செய்தார். உயிருடன் தோலை உரித்து ரத்தம் பருகுவது அவருடைய ஸ்டைல்... இப்படி கொடூரமாக சித்திரவதை செய்து வ்ளாட் டிராகுலா கொன்ற மனிதர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சமாம்!
இப்படி ரத்த வெறியும், சர்வாதிகாரமுமாக போய்க்கொண்டிருந்த வ்ளாட் டிராகுலாவின் வாழ்க்கை ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது...
1477 ல் துருக்கியுடன் நடந்த போரில் வ்ளாட் ட்ராகுலாவுடைய வீரர்களே அவருக்கு எதிராக திரும்பி, துருக்கியுடன் சேர்ந்துக்கொண்டு, வ்ளாட்டை கொன்றார்கள். துண்டிக்கப்பட்ட அவர் தலை, ஒரு தட்டில் வைத்து சுல்தான் முன் வைக்கப்பட்டது. வெற்றிக்களிப்போடு அவர் தலையை ஒரு கம்பில் செருகி, அரண்மனை வாசலில் பார்வைக்காக வைத்தார்.

வ்ளாட்டுடைய கோட்டை
பின் ட்ராகுலாவுடைய தலையில்லாத உடல் மட்டும் ஸ்னாகோவ் மோனாஸ்டரி ( Snagov Monastery ) என்கிற இடத்தில் புதைக்கப்பட்டது.
இத்தோடு எல்லாம் முடிந்தது என்று நினைத்த சமயத்தில், ஊருக்குள் அமானுஷ்யமாக சில சம்பவங்களும், சில மர்ம மரணங்களும் நேர! யாரால்? ஏன்? என்று தெரியாமல் எல்லோரும் குழம்பிப்போனார்கள். இறந்தவர்கள் எல்லோரும் கொடூரமாக கொல்லப்பட்டு, அவர்கள் உடலில் இருந்து இரத்தம் உறியப்பட்டிருந்தது.
கடைசி நேரத்தில் உயிர்பிழைத்த சிலர்... வந்தது “வ்ளாட் டிராகுலா” தான் என கிளப்பி விட.... உடனடியாக அவர் கல்லறை தோண்டப்பட்டது... அங்கு...
வ்ளாட் டிராகுலாவின் உடல் இல்லை.....
அவர்தான் ரத்தம் உறிஞ்சும் பேயாக நடமாடிக்கொண்டு இருக்கிறார் என இன்றுவரை நம்புபவர்கள் உண்டு.. அவர்தான் சீனியர் டிராகுலா! அவரிடம் கடிபட்டு அது மற்றவர்களை கடித்து, இப்படி வழிவழியாக வந்து இன்று வரை ட்ராகுலாக்கள் வாழ்ந்துக்கொண்டுதான் உள்ளது என நம்பவும் ஒரு பெருங்கூட்டம் இங்குண்டு.
சமீபகாலமாக, அவரை அங்கு புதைக்கவே இல்லை, வேறு இடத்தில் புதைக்கப்பட்டுள்ளது என்று ஒரு தரப்பும், அவரை விலையுயர்ந்த நகைகளுடன் புதைத்ததாகவும், அதை கொள்ளையடிக்க அவர் உடல் திருடப்பட்டதாகவும் இன்னொரு தரப்பும் சொல்கிறார்கள். இந்த மர்மத்துக்கு என்றோ ஒருநாள் விடை தெரியக்கூடும்....
எது எப்படியோ.. வ்ளாட் வாழும்போது செய்த கொடூரங்களை.. இறந்த ட்ராகுலாக்கள் கூட செய்ய முடியாது என்பதே உண்மை.

Add a Comment
5 Comments
ninaitthu parkka mudiyada bayangaram
Wow amazing article..
ட்ராகுலா இறந்தபின்னர் நடமாடுவது உண்மையோ பொய்யோ, இருக்கும்பொழுது செய்த கொடூரம் பயங்கரம்.
amazing article. is it true ? if yes i just wanna be a dracula... lol
இதுவரை ட்ராகுலாக்கள் கற்பனை கதாபாத்திரம்னு நினைத்திருந்தேன்..அவன் செய்த கொலைகளை படிக்கும்போது மனம் பதறுகிறது..டிராகுலாவாக மாற கோடி கணக்கில் செலவு செய்பவர்களை என்னவென்று சொல்ல