இறப்புக்கு பின்
மனிதன் இறந்தபின் என்ன நடக்கும்? யாருக்காவது தெரியுமா? ஆராய்ச்சியாளர்களை குழப்பும் பெரிய கேள்வி இது. இதயம் துடிப்பது நிற்ப்பது, இரத்த ஓட்டம் நின்றுபோய் இறப்பது எல்லாம் (Clinically Dead) எனவும், மூளை தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்வது மூளைச்சாவு (Brain Dead) எனவும் மருத்துவம் பிரித்துவைத்திருக்கிறது. இதெல்லாம் ஒருபுறம் கிடந்தாலும் இதைஎல்லாம் இயக்கும் உயிர் என்பது என்ன? எங்கிருக்கிறது? எங்கு போகிறது என்றொரு கேள்வி காலம்காலமாக நம்மை தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கிறது.

மத நூல்கள், மத நம்பிக்கைகள் போன்றவை வாழும்போது நம்மை செமைப்படுத்த சொர்க்கம், நரகம் போன்ற மேட்டர்களை சொல்லி வைத்திருக்கிறது. வழிவழியாக அதை நம்பித்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். தற்கால விஞ்ஞானம் அதற்குள்ளும் புகுந்து ஆராய முற்படுகிறது...
சரிதான், அதெல்லாம் உண்மையா என கண்டறிய வேண்டும் என்றால்? உயிரை விட்டுதான் கண்டுபிடிக்க வேண்டும். அப்படியே உயிரை விட்டு கண்டுபிடித்தாலும், செத்தவன் எப்படி சாட்சி சொல்வான்? என்கிற கேள்வி எழும். ஊர்ப்பகக்த்தில் நகைச்சுவையாக சொல்வதுண்டு... “முன்ன பின்ன செத்துருந்தாதானே சுடுகாடு தெரியும்” என!

பொதுவாகவே மனிதன் இறப்புடன் தன் வாழ்க்கை முடிந்து போவதை விரும்புவதில்லை. ஏனெனில்! வாழ்வை போல மரணம் மனிதர்களை ஈர்ப்பதில்லை, மாறாக பயத்தையே கொடுக்கிறது! அதைதான் “மரணபயம்” என்கிறோம். இந்த பயத்தில் இருந்து மீண்டு, இறப்புக்கு பின்னும் வாழ வேண்டும் என்கிற இச்சைதான், நம்மால் உருவாக்கப்பட்ட சொர்கம், நரகம், மற்றும் மறுபிறவி நம்பிக்கைகள்.
இந்த மறுபிறவி, சொர்க்கம், நரகம் ப்ளா ப்ளா எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இறப்புக்கு பின் என்னதான் நடக்கிறது என அறிவியல் கூறுவதை பார்ப்போமா?
உயிர் என்பது என்ன? இதுவரை இதுதான் உயிர் என்று சொல்ல முடியவில்லை! மீறிக்கேட்டால் செல்களின் வளர்ச்சி, மற்றும் இயக்கம் அது இது என்கிறார்கள். சிம்பிளாக சொல்ல வேண்டும் எனில் உயிர் என்பது ஒரு மின்சக்தி.. பேட்டரி போல, இது தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் பேட்டரி. நிறைய யோசித்தால் மண்டை குழம்பிவிடும் அதனால் இத்தோடு இதை விட்டுவிட்டு பேச வந்த டாப்பிக்குக்கு போவோம்..
இறப்புக்கு பின் உயிர் என்னவாகிறது? எங்கு போகிறது? என்றெல்லாம் கேள்விகளோடு, University of Southampton னை சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர், அமெரிககா, ஆஸ்திரியா மற்றும் லண்டனில் உள்ள 15 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமார் 2000 இதய நோயாளிகளை தேந்தெடுத்து கண்காணித்தனர். அதில் கிட்டத்தட்ட 40 சதவீத நோயாளிகள் இறந்துவிட்டார்கள் (Clinically Dead) என்று உறுதிபடுத்தப்பட்ட பின், செயற்கை சுவாசம் மூலமும் எலெக்ட்ரிக் ஷாக் மூலமும் உயிர் பிழைக்கவைக்கப்பட்டவர்கள்! அப்படி எழுந்தவர்களை நம்மாட்கள் ஆய்வு செய்ததில் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது...! ஆமாம் அவர்கள் அத்தனை பேருடைய அனுபவங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தது! இது எப்படி சாத்தியம்?

இங்குதான் இது மர்மமாக நீடிக்கிறது. சொல்லி வைத்தார்போல எல்லோரும் ஒரே பதிலை சொல்ல, ஆய்வாளர்கள் மண்டையை பிய்த்துக்கொண்டனர். அதில் ஒரு அனுபவத்தை பார்ப்போம்..!
“ஐயோ...! என்னால் மூச்சி விட முடியவில்லை, திணறுகிறேன். கண்கள் இருட்டுகிறது, உடல் முழுக்க ரணம்.. கடவுளே என்னை அழைத்துக்கொள் என இறைஞ்சுகிறேன்..!
இதுவரை நான் அனுபவிக்காத வலியை அனுபவிக்கிறேன்... சட்டென உடலின் பாரம் குறைகிறது. என்னவாகிறது எனக்கு? வலியும் மெல்ல குறைகிறது.. அட! எனக்கு சின்ன வயதில் இருந்தே அடிக்கடி தலைவலி வரும். அந்த வலி கூட மறைந்துவிட்டதே! நான் சரியாகிவிட்டேனா?’ என யோசிக்கிறேன்..

சரியாக மூன்று நிமிடங்கள் வரை எல்லோரும் தெரிகிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கும் என்னைக்கண்டு ஏன் அழுகிறார்கள்? கை கால்களை அசைத்துப்பார்க்கிறேன்.. முடியவில்லை.. கண்களை சுழற்றி பார்க்க எத்தனிக்கிறேன் முடியவில்லை... என்னவாயிற்று? ஓ..! நான் இறந்துவிட்டேனா? ஆமாம்.... சுற்றியிருப்பவர்கள் மெல்ல விசும்புகிறார்கள். உடைந்துப்போய் கதறும் என் மனைவிக்கு ஆறுதல் சொல்ல எத்தனிக்கிறேன்... முடியவில்லை! உடலில் கொஞ்சம் கொஞ்சம் ஒட்டியிருந்த சின்ன சின்ன ரணங்களும் குறைந்து காணாமல் போகிறது.
இப்போது என்னையே நான் பார்க்கிறேன்...! நான் மேலே என் உடல் கீழே...! ஆமாம், இறந்துவிட்டேன் உயிர் உடலைவிட்டு வெளியேறிவிட்டது என்பதை தீர்க்கமாக உணருகிறேன். குடும்பத்தினரின் அழுகை என்னை சஞ்சலப்படுத்தவில்லை. என் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் என் உடல் வேகவேகமாக எங்கோ ஓடுகிறது.. பரவச உணர்வு ஆட்கொள்ள.. இதுவரை இல்லாத ஒரு மகிழ்ச்சியில் திளைக்கிறேன்... இருட்டான ஒரு சுரங்கத்துக்குள் படுவேகமாக பயணிக்கிறேன்... தூரத்தில் பிரகாசமான ஒளி தெரிகிறது. கண்களை மழுங்கடிக்கும் பிரகாசம்...! அங்கு நான் 5 ஆம் வகுப்பு படிக்கும்போது இறந்துபோன தாத்தா நிற்கிறார்.. இருகைகளையும் அகல விரித்து, “வா!” என ஆசையாக அழைக்கிறார்...
.jpg)
அவருக்கு பின் என் அப்பா.. மேலும் இறந்து போன பல உறவினர்கள் ஒன்றாய் என்னை சூழ்ந்துக்கொண்டு வரவேற்கிறார்கள். எத்தனை வருடங்களாகிவிட்டது...? அப்பாவை கட்டியணைக்க ஆசையாசையாய் ஓடுகிறேன்... அப்பா முகத்தில் அரும்பியுள்ள புன்னகை மெல்ல மறைந்து.. சோகம் ததும்புகிறது..அப்பா, தாத்தா எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறார்கள். இதோ மீண்டும் இருட்டுக்குள் பின்னோக்கி இழுக்கப்படுகிறேன்...
ஓரிரு நொடிகள்... உடலில் கணம் கூட, வலியை மீண்டும் உணர்கிறேன். மீண்டும் தலை வலிக்கிறது. கதறிக்கொண்டிருந்த என் மனைவி கண்களை துடைத்துக்கொண்டு என்னை பார்த்து சிரிக்கிறாள்...” இப்படியாக விரிகிறது, ஹார்ட் அட்டாக்கில் இறந்து போய் மீண்டும் உயிர்பிக்கப்பட்ட ஒருவரின் வாக்குமூலம்.
ஒருவர் மட்டுமல்ல.. கிட்டத்தட்ட அந்த 800 பேருமே சொன்னது இதைதான். இதிலிருந்து சொர்க்கம், நரகத்தை கற்பனை செய்து பாருங்களேன்... ஒருமாதிரியாக புரியும். ஆராய்ச்சியாளர்களிடம் பேசிய அனைவரும் சொர்க்க அனுபவத்தை இப்படிதான் சொல்லியிருக்கிறார்கள். ஒருவேளை உள்ளுக்குள் ஒரு நீதிமன்றம் இருந்து அதில் விசாரணை நடத்தி.. இப்படியெல்லாம் கற்பனை செய்துகொண்டே போகலாம்... ஆனால் உயிர் திரும்பி வந்தவர்கள், உயிர் பிரிந்த சில நிமிட அனுபவங்களைத்தான் பகிர்ந்துள்ளனர். அதற்கும் மேல் என்ன என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்...!
இந்து மதத்தில் மரணத்திற்கு பின்னான வாழ்வை இப்படி விவரிக்கிறார்கள், “ஆன்மா என்பது ஒன்றுதான் அதற்கு அழிவே கிடையாது! அது ஒரு உடலுக்குள் இருந்து இன்னொரு உடலுக்கு இடம் பெயர்கிறது” என்கிறார்கள். இன்னும் ஆழமாக தேடினால்... எல்லாம் மாயை என்கிறார்கள். அதை புரிந்துக்கொள்ள வேதங்கள் கற்க வேண்டும். பகவத் கீதையில் “மனிதன் உடைகளை மாற்றுவது போல ஆன்மா உடல்களை மாற்றுகிறது” என்கிற ரீதியில் ஒரு கருத்து உண்டு.
இஸ்லாத்திலும் சுவர்க்கம், நரகம் உண்டு, இந்துக்கள் “ஒழுக்கமாக வாழவில்லை என்றால் நரகத்துக்கு சென்றுவிடுவாய்!” என்று பயமுறுத்துவதுபோல, இஸ்லாத்தில் அல்லாஹ்வின் ஆணைப்படி, நற்போதனைகளின் அடிப்படையில் வாழும் ஒரு முஸ்லீம் இறப்புக்கு பின் சொர்க்கத்துக்கு செல்வான் என்றும் தவறுபவர்கள் நரகத்துக்கு செல்வர் என்றும் கூறப்படுகிறது. இஸ்லாத்தில் வாழ்க்கை முறை குறித்து நிறைய சட்டதிட்டங்கள் உண்டு. அதை பார்த்தால் கட்டுரை நீண்டுவிடும் என்பதால் இஸ்லாத்திலும் சொர்க்கம், நரகம் உண்டு என்கிற கருத்தோடு முடித்துவிடுவோம்.
அடுத்து கிருத்துவ மதம், மேற்கூறிய இரண்டு மதங்களை போலத்தான் இதிலும். இதில் சொர்க்கம் நரகம் சார்ந்த விவரிப்புகள் இன்னும் சற்று அதிகம், அவர்கள் வாழ்வியல் முறைப்படி சொர்க்கத்தை டிசைன் செய்திருப்பார்கள்.

சொர்க்கம் பற்றி நிறைய பார்த்தாகிவிட்டதால், நரகத்தை கொஞ்சம் எட்டிப்பார்ப்போம். (கிட்டத்தட்ட எல்லா மதங்களுமே நரகங்களுக்கான விவரிப்பை ஒரேமாதிரிதான் வைத்திருக்கிறது) மனிதனை ஒரு கோழியாக்கி, தந்தூரி சிக்கனை போல நெருப்பில் வாட்டுவது, சில்லி சிக்கனை போல எண்ணெயில் பொறிப்பது, ஊசியால் குத்திக்குத்தி சிறுகச்சிறுக கொல்வது இந்த ரீதியில் போகிறது.

சோ ஒழுக்கமாக வாழ்ந்து சொர்க்கத்தை அடையும் வழியை பாருங்க பாசு..!
அது சரி ஒழுக்கம் என்றால் என்ன? ஆளை விடுங்கப்பா.....
அடுத்த பகுதி : பூமிப்பந்துக்கு நடுவில் மிக மிக உஷ்ணமான பகுதியில் (Core of the Earth) நரகம் என்கிற ஒன்று இயங்கிக்கொண்டு இருக்கிறது என்று சீரியஸாக சொல்கிறார்கள், அதற்கான ஆராய்ச்சிகளும் நடந்துக்கொண்டு இருக்கிறது. இதைப்பற்றி தேடினால் ஏகப்பட்ட டாக்குமெண்டரிகளும், கதைகளும் இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது..
அடுத்த கட்டுரையில் நரகம் இருக்கிறதா? அதற்கென்ன ஆதாரம் என்று தெளிவாக பார்ப்போம்.

Add a Comment
13 Comments
இறந்த பின் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது இறப்புக்கு பின் ஆத்மா கண்டிப்பாக உண்டு இது அனைத்து உயிர்களுக்கும் பொருந்தும் சொர்க்கம் ,நரகம் என்பது இல்லை அது கட்டி விட்ட கட்டுகதைகள்
இருக்குற வரைக்கும் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாம இருப்போம்.. நல்லதே நடக்கும்..
நண்பா நல்ல விரிவாக்கம் மற்றும் கருத்தை பதிவிட்டு இருக்கிறீர்கள் ...எனக்கும் இருபுற்ற அனுபவம் இருக்கிறது ....ஒரு விபத்து மூலம் என் நினைவுகள் செயலிழந்து போனது ...நான் இறந்து விடுவேன் என அனைவரும் கதறி அழுபோது...நான் எல்லாவற்றையும் காதில் வாங்கி கொண்டு ...என் முன் நடந்ததை வியந்து பார்த்தேன் சிருது பயத்துடன்....நீங்கள் கூறியது உண்மைதான்...நம் உடம்பு நம் கட்டுப்பாட்டில் இருக்காது ஆனால் ...பயதை உணர முடிந்தது என்னால் ...
I like it
மனிதனுக்கு உயிர் ஆத்மா இரண்டுமே கிடையாது இறப்புக்கு பின் நிறந்தர தூக்கமே
Is it true??
Its true
இப்பவே பார்க்கனும் போல இருக்கு அண்ணா
Naan ninaiththathum itheponruthan
அந்த 800 பேர் ஒரே மாதிரி கூறியது உண்மையா சகோ
nice
இந்து மதம் உயிர்பிரிந்த பின் இப்படி தான் இருக்கும் என்று சொல்லி இருக்கிறது.
Very interesting