பிலடெல்பியா எக்ஸ்பெரிமென்ட்!!
அதென்ன? Philadelpia Experiment! மர்மங்கள் நிறைந்த ஒரு சோதனை...
நம்மில் சிலர் இதைப்பற்றி கேள்விப்பட்டிருப்போம், அல்லது எங்காவது படித்திருப்போம். "சரி..! அது ஒரு ஆராய்ச்சி! அதில் என்ன மர்மங்கள்? ஏன் இந்த எக்ஸ்பெரிமென்ட் செய்யப்பட்டது?" போன்ற கேள்விகள் உங்களுக்குள் எழலாம்!
வாருங்கள் விடைதேடுவோம்...
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் உலக தாதாவாக ஆகும் கனவில் இருந்த அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியாக இருந்த இரண்டு நாடுகள் ஜெர்மன், மற்றும் ஜப்பான். இந்த இரு நாடுகளும் சேர்ந்து அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு தண்ணி காட்டிகொண்டிருந்த சமயமது!.
நவீன ஆயுதங்களை தயாரிப்பதிலும் அவர்கள் இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டு அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளிய காலமது.
குறிப்பாக நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து தாக்குவதிலும், சுவடே தெரியாமல் மிதக்கும் கப்பல்களை தாக்கி அழிப்பதிலும் அவர்கள் நிபுணத்துவம் பெற்றிருந்தார்கள். நூற்றுக்கணக்கில் போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டது.. எதிரி எங்கிருந்து தாக்குகிறான் என்றே தெரியாமல் அமெரிக்க கூட்டுப்படைகள் குழம்பிக்கொண்டிருந்தது.
தொடர் சறுக்கள்களால் துவண்டு போயிருந்த அமெரிக்கா, இந்த தாக்குதல்களில் ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்து போனது, தாக்குதல்களால் ஏற்பட்ட நஷ்டம் ஒருபுறமும், அவமானம் மறுபுறமும் பிடுங்கித்தின்ன, ஜெர்மன் மற்றும் ஜப்பானுக்கு பதிலடி கொடுக்கவும், விஞ்ஞான முன்னேற்றத்தில் உங்களை விட நான் சற்று உயர்ந்தவன் என்று காட்டவும் தொடங்கப்பட்டதுதான் "பிலடெல்பியா எக்ஸ்பெரிமென்ட்!”
இந்த பிலடெல்பியா எக்ஸ்பெரிமென்டின் நோக்கம் என்ன?
ரேடார் கண்களில் இருந்து கப்பலை முற்றிலுமாக மறைந்துபோக வைப்பது!
கப்பலை எப்படி மறைய வைக்க முடியும்?
அதற்கு அவர்கள் கையில் எடுத்ததுதான் "டெலிபோர்ட்டேஷன்" என்கிற ஒரு மேட்டர்...! ‘ஆல்பர்ட் ஐன்ஸ்டின்’ அவர்களுடைய சார்பியல் கோட்பாட்டை (Relativity Theory) அடிப்படையாக வைத்து உருவான " டெலிபோர்ட்டேஷன்" (Teleportation) என்கிற ஒரு விஷயத்தை நடைமுறையில் செய்து பார்ப்பதுதான் பிலடெல்பியா பரிசோதனையின் நோக்கம்!

டெலிபோர்ட்டேஷன் மாதிரிப்படம் ( சித்தரிக்கப்பட்டது )
டெலிபோர்ட்டேஷன் என்பது என்ன ?
எளிதாக சொல்லவேண்டும் எனில், "ஜீபூம்பா" என்று ஓரிடத்தில் மறைந்து மற்றொரு இடத்தில் தோன்றுவதுதான் டெலிபோர்ட்டேஷன்!
அறிவியல் ரீதியாக சொல்லவேண்டும் எனில், இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே அணுக்கருக்களால் உண்டானது என்பது உங்களுக்கு தெரியும், அணு உட்கருவில் உள்ள சதவிகித மாற்றங்கள்தான் மனிதன், மிருகம், இரும்பு, தங்கம்,இன்னும் இன்னும் எல்லாம்... சுருங்க சொல்லின், அணுவின்றி இவ்வுலகில் எதுவுமே இல்லை!
டெலிபோர்டேஷன் என்பது அந்த அணுகட்டமைப்பை ஓரிடத்தில் உடைத்து, அதே சதவீதத்தில் வேறொரு இடத்தில் (Reconstruct) சேர்ப்பதுதான்.
இந்த முறையில் ஒரு போர்க்கப்பலை ஓரிடத்தில் மறைய வைத்து மற்றொரு இடத்தில் தோன்ற வைத்து, தாக்குதல் நடத்திவிட்டு தப்புவதுதான் அந்த திட்டத்தின் நோக்கம். இது சார்ந்த சின்ன சின்ன சோதனைகள் 1938 ல் இருந்தே தொடங்கிவிட்டன என்று சொல்லப்பட்டாலும், 1943 ஆம் வருடம்தான் " ப்ராஜெக்ட் ரெயின்போ" என்று பெயரிடப்பட்ட "பிலடெல்பியா எக்ஸ்பெரிமென்ட்" அரங்கேறியது.

USS ELRIDGE DE 173 Destroyer Escort
USS ELRIDGE எனும் (DE 173 Destroyer Escort) என்கிற போர்க்கப்பலில் இந்த சோதனைக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிக ரகசியமாக செய்யப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட என்ஜினியர்களும், விஞ்ஞானிகளும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தினர். (அந்த சமயத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அமெரிக்க கப்பற்படையில் பணியாற்றிக் கொண்டிருந்ததாகவும், அவர் ஆலோசனையின் பெயரில்தான் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டது என்றும் ஒரு தகவல் உண்டு)

அதிகாரிகளுடன் ஐன்ஸ்டைன்
அதற்காக, Destroyer Escort கப்பலில் அதிசக்தி வாய்ந்த ஜெனரேட்டர்களும், மோட்டார்களும், காயல்களும் பொறுத்தப்பட்டது, கப்பலை சுற்றி மிகவும் சக்திவாய்ந்த காந்தப்புலத்தை (magnetic field) உருவாக்க வேண்டும், அந்த காந்த சக்தியின் விளைவாக, கப்பலே அங்கிருந்தாலும் கூட, ரேடாரின் சிக்னல்கள் கப்பலில் பட்டு எதிரொலிக்காது. இடையில் ஏதாவது பொருள் ரேடார் சிக்னலை மறைத்தால்தான்'அங்கு என்னவோ தடுக்கிறதே அது என்ன?' என்று ஆராய்வார்கள். நம்மாட்கள் உருவாக்கிய காந்தசக்தி கப்பலை டெலிபோர்ட் செய்து இடம் மாற்றிவிடுவதால் அது ரேடார் கண்களில் படாது..! இதைதான் கணக்கிட்டு செய்தார்கள். இந்த அடிப்படையில் கணக்குகளை போட்டு தியரி லெவலில் அதன் விளைவுகளை கணித்து இந்த சோதனையை ஆரம்பித்தார்கள்!
இதற்கு முன், சின்ன சின்ன அளவில் இந்த சோதனை இரண்டுமுறை நடத்திப் பார்க்கப்பட்டது என்றாலும், அதெல்லாம் தானியங்கி முறையில் ஆட்கள் இல்லாமல் நடத்திப் பார்க்கப்பட்டது! ஆனால் இந்த முறை, சில ராணுவத்தினரும், EDWARD மற்றும் DUNCAN CAMERON என்கிற இரண்டு அனுபவம் வாய்ந்த பொறியாளர்களும் அந்த கப்பலின் கட்டுப்பட்டு அறையில் இருந்தார்கள்.

அதிசக்தி வாய்ந்த மோட்டார்களும், காயல்களும்
சோதனை தொடங்கியது! அனைத்து ஜெனரேட்டர்களும் இயக்கப்பட்டு, கப்பலை சுற்றி காந்தப்புலம் சூழ்ந்தது. அப்போதுதான் எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆம்.. பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கண் முன்னே கப்பல் மாயமாக மறைந்து போனது!
உடனடியாக ரேடாரை இயக்கிப்பார்த்தார்கள். ஆச்சர்யம்! ரேடார் பார்வையிலும் கப்பல் சிக்கவில்லை. இவர்கள் கணித்தது மிகச்சரியாக நடந்தது. கப்பலும் மறைந்தது!
( அவர்கள் கப்பலை மறையவைக்க நினைக்கவில்லை. ரேடார் கண்களில் இருந்து மட்டும் மறைந்தால் போதும் என்றுதான் நினைத்தார்கள். இந்த விளைவு அவர்களே எதிர்பாராதது. என்றொரு கருத்தும் உண்டு )
இதை முழுதுமாக நேரில் பார்த்தவரான கார்லோஸ் அளிண்டே (carlos allende) என்பவர் "நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கப்பலை சுற்றி பனிமூட்டம் சூழ்ந்தது, அந்த பனிமூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக பச்சை நிறமாகி இன்னும் அடர்த்தியாகி , மேகம் போல உருமாறி பின் கலைந்து போனது, அப்போது அங்கே அந்த கப்பல் இல்லை!" என்கிறார்.
சரியாக 20 நிமிடங்கள் கப்பல் யார் கண்களுக்கும் தெரியவில்லை என்கிறார்கள்! இன்னும் சில சாட்சிகள், கப்பல் இங்கு மறைந்த அதே நேரத்தில், 360 மைல்கள் தாண்டி உள்ள இன்னொரு கடற்படை துறைமுகத்தில் தோன்றியதாக சொல்கிறார்கள்.
சரியாக 20 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த சோதனையின் முடிவில், மறைந்த கப்பல் திரும்ப தோன்றும்போது அதில் இருந்த ராணுவ வீரர்களில் சிலர் காணாமல் போயும், சிலர் இறந்தும் மற்ற சிலர் பைத்தியங்களாகவும் வெளிவந்ததனர்! காணாமல் போனவர்கள் போன இடம் தெரியவில்லை. (காணாமல் போனவர்கள் காலப்பயணம் செய்து எதிர்காலத்துக்குள் போய்விட்டார்கள் என்கிற கருத்தும் உண்டு, இதை வைத்து நிறைய புனைக்கதைகளும் உண்டு )

பைத்தியமான ஊழியர்கள் ! Insane Crew Members

சோதனையின்போது மறைந்த மனிதர்
கப்பலில் இருந்த ஒருவர், பிரிந்த அணுக்கருக்கள் சேரும்போது ஏற்பட்ட மாறுதலில் இரும்பு சிலையாக மாறிவிட்டார் என்கிறார்கள். சரியான ஆதாரங்கள் இல்லை. அல்லது அமெரிக்க ராணுவம் ஆதாரங்களை மறைத்துவிட்டது.
இதைதவிர, இச்சம்பவம் சார்ந்து ஒரு சுவாரஸ்யமான தகவலும் உண்டு. அது ஒரு காலப்பயணம்! (Time Travel) கப்பலின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த எஞ்சினியர்கள் இருவரும் சோதனை ஆரம்பித்த சில கணங்களில், அதிசக்தி வாய்ந்த காந்த அலைகளை தாங்க முடியாமல் ஜெனரேட்டர்களை அணைக்க முயற்சிக்க, அது பலன்தராமல் போயுள்ளது. இதற்கு மேல் இதில் இருப்பது ஆபத்து என, கப்பலில் இருந்து கடலில் குதித்துள்ளனர். அவர்கள் தரையை தொட்ட இடம் தண்ணீர் அல்ல! அது ஒரு புல்தரை! ஆம்... இந்த டெலிபோர்டேஷன் மாறுதல்களால் அவர்கள் காலப்பயணம் செய்து 1983 க்கு முன்னேறியுள்ளனர்! (காலப்பயணம் குறித்த கட்டுரையில் இதைப்பற்றி விரிவாக பார்ப்போம்) இந்த சம்பவத்தை வைத்து ‘PHILADELPIA EXPERIMENT’ என்று ஒரு படம் கூட வந்தது.
ஆட்கள் இறந்துபோனதாலும், மர்மமாக சில விஷயங்கள் நடந்ததாலும், இந்த சோதனை இந்த அளவிலேயே கைவிடப்பட்டது, இறந்தவர் குடும்பத்திற்கு அவர்கள் இந்த சோதனையில் இறந்த விஷயத்தை தெரியப்படுத்தாமல் மூடி மறைத்து, இப்படி ஒரு சோதனையே நடக்கவில்லை என்று அமெரிக்க ராணுவம் மறுத்துவிட்டது!
ஆனால்! இந்த சம்பவம் சார்ந்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கும் ரானுவத்தரப்பிலோ அரசுத் தரப்பிலோ பதிலில்லை....
இன்றுவரை......

Add a Comment
8 Comments
கால பயணம் உண்மை யா!!!
Experiment ah kitaa ninu partha mathiri feeling superb.. New information...
Good history information
Semma
Good
superb
Nice bro
Wow excellent information. Good!