ZOMBIES – இறந்த மனிதர்கள் – பாகம் 1
ZOMBIES – சோம்பீஸ் என்றால் என்ன ?
பெரிதாக வகுப்பெடுக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன் ! ஏனெனில் திரைப்படங்கள் வாயிலாகவும், கற்பனை கதைகளின் வாயிலாகவும் நாம் அறிந்த ஒரு விஷயம்தான். ஏதாவது ஒரு கெமிக்கல் பாக்டரியில் இருந்து தவறான மிக்சிங்கோடு கெமிக்கல் வெளியாகி, அது ஏதோ ஒரு விலங்கின் உடலில் புகுந்து, பின் அந்த விலங்கில் இருந்து மனிதனுக்கு வந்து... இப்படிதான் பெரும்பாலான ‘Zombie’ படங்களில் பார்த்திருப்போம்.

சினிமா ZOMBIE !
இந்த ‘Zombie’ கதைகளுக்கு எல்லாம் பின்னால் “உயிர் நீட்டித்தல்” என்கிற நம் ஆழ்மன இச்சை உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இறந்த மனிதன் உயிர்பெற்று வருவதைப்பற்றி கிட்டத்தட்ட எல்லா மதங்களிலுமே உள்ளது. சிலுவையில் அறையப்பட்ட ஏசு உயிர்த்தெழுவார் என்கிற நம்பிக்கை கிருத்துவ மதத்தில் உண்டு.
இஸ்லாத்தின் மீது வன்முறையைக் கையாளுபவர்களுடன் போரிட்டு மடியும் போராளிகளுக்கு. அல்லாஹ்வின் பெயரால் உயிர்துறப்பவர்களுக்கு சொர்க்கத்தில் வளமான வாழ்வு காத்திருக்கிறது என்கிற நம்பிக்கை உண்டு !
இந்து மதத்தில் சித்தர்கள் சிலர் இறந்தவரை பிழைக்க வைத்தார்கள் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் உண்டு. ஏதாவது ஒரு வழியில் இறப்பிலிருந்து மீள வேண்டும் என்பது மனிதனின் ஆசை, அதற்கு தோதாகத்தான் ஆவிகள், பேய்கள், மறுபிறவி நம்பிக்கைகள் போன்ற நம்பிக்கைகள் நம்மை தொடர்ந்துக்கொண்டே வருகிறது.
சரி! ‘Zombie’ களும் ஆவி, பேய்களும் ஒன்றா ?
நிச்சயமாக இல்லை....! ஆவி, பேய்கள் கதை வேறு, ஒருவர் இறந்த பிறகு அந்த ஆன்மா வேறு உடலை வாடகைக்கு எடுத்து சில பல கிராபிக்ஸ்கள் எல்லாம் செய்து தன்னை கொன்றவனை பழிவாங்கும், அல்லது வாழ நினைத்த வாழ்க்கையை வாடகை உடலில் வாழும். இதெல்லாம் குறிப்பிட்ட சிலருக்கு உபத்திராவதம் கொடுத்துவிட்டு உடலைவிட்டு ஓடிவிடக்கூடிய சென்டிமென்டல் கேரக்டர்கள்.
ஆனால் ‘Zombies’ அப்படி கிடையாது. அதற்கு இலக்கெல்லாம் கிடையாது. சைக்கோ கில்லர் போல..! கண்ணில் பட்டவர்களை எல்லாம் கொல்லும், பிரச்சினை என்னவென்றால் ? ‘Zombies’ இடம் கடிவாங்கிய ஆட்கள் உடலிலும் அந்த விஷம் புகுந்து அடுத்த சில நிமிடங்களில் அவரும் சோம்பியாக மாறிவிடுவார்.
மாறியவர் என்ன செய்வார் என்பதைத்தான் பல படங்களில் பார்த்திருக்கிறோமே... அதேதான் ! அடுத்தவரை கடித்து அவரையும் மாற்றுவார்.. ‘Zombies’ பற்றி பேசுபவர்கள் சொல்லும் காரணம் இதுதான். “ ஒரு ‘Zombie’ இன்னொரு ‘Zombie’ யை கொல்லுவதில்லை! காரணம் மனிதன் சோம்பீசை பார்த்து அஞ்சுவது போல அவைகளும் நம்மை பார்த்து அஞ்சுகிறது, அதனால்தான் இலக்கற்று கண்களில் படும் மனிதர்களை எல்லாம் கொல்கிறது !“ என...
“இன்பெக்ட் ஆனவர்களுக்கு அறிவே இருக்காது என்கிறார்களே அப்புறம் எப்படி தற்காத்துக்கொள்ள மனிதர்களை கொல்கிறார்கள் என்கிறீர்கள் ? “ என்கிற கேள்விக்கு zombies இருப்பதாக நம்பும் ஆட்கள் கூறும் பதில் மிக எளிது...
“ அதேதான் அவர்கள் நினைப்பும் !“
சோம்பீஸ் இருக்கா இல்லையா என்றெல்லாம் பார்ப்பதற்கு முன், அந்த வார்த்தை எங்கிருந்து வந்தது, அதன் வரலாறு என்ன என்று தேடுவோமா...?
ஹைட்டி(Haiti) என்றொரு நாடு உண்டு, முதன்முதலாக இந்த வார்த்தையை பயன்படுத்தியது அவர்கள்தான், ? “ NZOMBI” என்கிற காங்கோ வார்த்தைதான் மருவி “ZOMBIE” ஆனது.
‘Zombies’களின் பிறப்பிடமாக கருதப்படும் ஊர் ஹைட்டி என்பதால் அங்கிருந்தே பார்ப்போம். வாருங்கள், அதோ.. தள்ளாடியபடி நடந்துப்போகும் சோம்பியை பின்தொடர்வோம்.

ஹைட்டியில் Zombie யாக மாறிய ஒருவரின் புகைப்படம் !
ஹைட்டி ! மூட நம்பிக்கைகளும், பில்லி சூனியம், ஏவல் போன்றவைகளுக்கும் பெயர் போன ஊர். அங்கு வாழும் Voodoo எனப்படும் சூனியக்காரர்கள் பலருக்கு தொழிலே இதுதானாம் ! ஒரு மனிதனை ZOMBIE ஆக்க, அவர்கள் ஒரு பொடியை வைத்திருக்கிறர்கள், அதற்கு பெயர் “ZOMBIE POWDER” ! ( என்னய்யா இது ஃபேஸ் பவுடர் மாதிரி கேஷுவலா சொல்றீங்க ? )
இறந்து போன மனிதன் ஒருவன் உடலில் அந்த பொடியை தூவி, “சூ மந்திரக்காளி... எழுந்து வா !“ என்றால் இறந்து போனவன் எழுந்துவிடுவானாம். ஆனால் அவனால் அவனிஷ்டத்திற்கு செயல்பட முடியாது. அவனை ஏவிவிட்ட மந்திரவாதியால்தான் அவனை இயக்க முடியும்.

Zombie களை உருவாக்கும் நவீன voodoo !
மைன்ட் கண்ட்ரோல் அது இது என விஞ்ஞானத்தோடும் விளையாடுகிறார்கள்...! அதாவது, ஒரு மனிதனின் சுய செயல்பாடுகளை மந்திரவாதி தன்னுடைய கண்ட்ரோலுக்கு கொண்டுவந்துவிடுவார். Zombie ஆன மனிதன் வெறும் பொம்மை..! என்ன... சற்று கொடூரமான பொம்மை, அதை ஆட்டுவிக்கும் சக்தி மந்திரவாதிகளுக்கு மட்டுமே உண்டு. அதற்குதான் சோம்பி பவுடர் எனப்படும் அந்த மந்திரித்த திருநீரை பயன்படுத்துகிறார்கள்.
இப்படி Zombies களை கட்டுப்படுத்தி கடுமையாக வேலைகளை வாங்கி, நல்ல காரியத்துக்கும் உபயோகப்படுத்தியுள்ளார்கள் என்பது கொசுறு செய்தி...
தேமே என சொன்ன வேலைகளை செய்யும் அல்லக்கை அடிமை Zombies !
வாருங்கள்... ஹைட்டி மந்திரவாதி ஒருவரை தொடர்ந்து சென்று, என்னதான் செய்கிறார் என்று பார்ப்போம்..
நள்ளிரவு நேரம்... அதோ.. சுடுகாட்டை நோக்கி விடுவிடுவென நடந்துக்கொண்டிருக்கிறார். நிலவொளியில் ஆஜானுபாகுவான அவர் உருவம் மட்டும் தனியாக போகிறது... அவர் நடக்கும் பாதையெங்கும் சருகுகள் மிதிபடும் ஓசை சரசரவென கேட்கிறது. சுடுகாட்டின் இரும்பு கேட்டை பலம்கொண்டு தள்ளுகிறார்... கிரீச்சென அலறிகொண்டே திறக்கிறது..!

voodoo மந்திரவாதி !
பிணம்தின்ன வந்த நரிகள் கூட இவரைக்கண்டு ஊளையிட்டவாறு தெறித்து ஓடுகிறது.. உள்ளே நுழைந்தவர் கண்களால் அந்த இடத்தை அலசுகிறார். புதிதாக மூடப்பட்ட நான்கு குழிகள் தெரிகிறது. கையில் கொண்டுவந்த விளக்கை கீழே வைத்துவிட்டு அந்த, நிலவொளியில் அந்த குழிகளை தோண்டி பிணங்களை வெளியே எடுக்கிறார். நிலவொளியில், இரத்தமெல்லாம் வற்றிப்போய் வெளிறிய முகங்களோடு சந்தமாக நான்கு பிணங்களும் கிடக்கிறது... எடுத்த பிணங்களின் வாயிலும், உடலிலும் கைவசமிருக்கும் சோம்பி பவுடரை தூவுகிறார். கண்களை மூடி ஏதோ மந்திரம் சொல்கிறார்... தூரத்தில் ஓநாய்கள் ஊளையிடுகிறது..! அதுகூட மந்திரவாதியை சலனப்படுத்தவில்லை...
வானம் பார்த்து பேய்ச்சிரிப்பு சிரித்துவிட்டு, நான்கு பிணங்களையும் அதே இடத்தில் விட்டுவிட்டு நகருகிறார் !
சற்று நேரம் கழிகிறது. நான்கு பிணங்களும் எழுகிறது. தாங்கள் சுடுகாட்டில் இருக்கிறோமா! என நம்பாமல் திகைக்கிறது, தின்ன வரும் நரிகளும் ஓநாய்களும் அவர்களை கண்டு பயந்து ஓடுகிறது.. மேலுள்ள மண்ணை தட்டிவிட்டு அவரவர் கிராமத்தை நோக்கி நடக்கிறார்கள்.
அந்த நால்வரும் சோம்பிகள் ! அந்த நால்வரின் கண்ட்ரோலும் நம் மந்திரவாதியின் கைகளில் ! அவர் என்ன நினைக்கிறாரோ அதை அவர்கள் செய்வார்கள். அவர்களை நெருங்க முடியாது, அவர்கள் கடித்தால் அவர்கள் உடலில் உள்ள விஷம் நம்முடலுக்குள் பாய்ந்து நம்மையும் அவர்களில் ஒருவராய் மாற்றிவிடும். அதனால் ஏவிய மந்திரவாதியை கொல்ல வேண்டும், அல்லது இவர்கள் ஒவ்வொருவராய் மண்டையை பிளந்து கொல்ல வேண்டும்.
இல்லையெனில் சோம்பிகளுக்கு அவற்றை ஏவியவர் அழியும் வரை அழிவே இல்லை...
இப்படியெல்லாம் செவிவழி செய்தியாக கேட்டறிந்த ஆராய்ச்சியாளர் வேட் டேவிஸ் என்பவர்... “என்னன்னவோ சொல்றாங்களே.. என்னதான் இருக்கு இதில் ? “நேரிலேயே பார்த்துவிடுவோம் என உறுதியோடு 1982 ல் ஹெய்ட்டிக்கு புறப்பட்டுச்சென்றார் . அவர் அங்கு சென்ற சமயத்தில்தான் சமீபத்தில் இறந்து போன இருவர் “உயிர்” பெற்று வந்து ஊருக்குள் அலைந்துக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
Wade Davis (ஆராய்ச்சியாளர்)
ஆகா செத்தவனே சாம்பிளா கிடைச்சிட்டான்யா என குதூகலித்தவர். அவர்களை சந்திக்க முடிவெடுத்தார்..! பெரும் முயற்சிக்கு பின் Zombies ஆகிவிட்ட அவர்களை ஊரார்கள் உதவியுடன் சந்தித்தார்.
டேவிஸ் அவர்களை சந்தித்தபோது அவர்கள் தெளிவாகவே பேசினார்களாம் ! ஆனால் ஏதோ ஒரு பதட்டமும் படபடப்பாகவே கானப்பட்டார்களாம், விடாமல் அவர்களிடம் பேசி சில விஷயங்களை குறிப்பெடுத்துக்கொண்ட ஆய்வாளர். அந்த சோம்பி பவுடர் எப்படி தயாரிக்கிறார்கள் என்றும் கேட்டு தெரிந்துக்கொண்டாராம். அதன்பின் வூடு என்றழைக்கப்படும் அந்த மந்திரவாதிகளின் தலைவரை சந்தித்து Zombie Powder ஃபார்முலாவை கூட வாங்கிவிட்டாராம்..
இவன் ஏதோ அளந்து விடுரான்னு நீங்க நினைக்கலாம்... அதெப்படி ஒரு பவுடரோ, கேமிக்கலோ ஒரு மனிதனின் மூளையை செயல்படவிடாமல் தடுக்கும்.. அது ஏன் இலக்கற்று அடுத்தவரை கொல்ல வேண்டும், அல்லது இனமாக சேர்க்க வேண்டும் என்றெல்லாம் கேள்விகள் எழும்... எழ வேண்டும்..
“வெறிநாய்க்கடி” என்றொன்று நம்மூரில் உண்டு, ரேபீஸ் என்பார்கள், அந்த வெறிநாய் மனிதனை கடித்து மனிதனுக்கு ட்ரீட்மென்ட் எடுக்காமல் விட்டால் என்னவாகும் தெரியுமா ? நம்மில் பெரும்பாலாம்னோர் கேள்விப்பட்டிருப்போம்..தெரியாதவர்களுக்காக இந்த விளக்கம்...

மனிதன் நாய்போல குரைக்க ஆரம்பிப்பான், நாய்களை போலவே பல சேட்டைகளை செய்வான்.. நோய் முற்றி சரியாக 20 நாட்களுக்குள் இறந்துபோவான்..! இதென்ன ? அந்த வெறிநாயின் குணம் மனிதனுக்கு எப்படி வந்தது ? அப்போ அதுவும் ஒருவகை Zombie தானே ?
ரேபீஸ் அட்டாக்கில் பாதிக்கப்பட்டு Zombie ஆன மனிதர் ஒருவர் மற்றவர்களை துரத்தி துரத்தி கடிட்டதைப்பற்றிய பதறவைக்கும் பயங்கரமான உண்மை சம்பவத்தை ஆதாரங்களோடு வரும் பகுதிகளில் பதிகிறேன்..
மீண்டும் Zombies க்கு வருவோம்.... ! அறிவியல் “Zombies” என்கிற கான்செப்டை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அது சினிமாவுக்காக உருவாக்கப்பட்ட Fictional Charecter என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அறிவியலே ஒப்புக்கொள்ளும் சிலவகை Zombies உண்டு.. அதைப்பற்றி பின்வரும் பகுதிகளில் விளக்குகிறேன்...
அடுத்த பகுதி : சாம்பியுடன் வேட் டேவிஸ் பேசியது, மற்றும் சில விவரிக்க முடியாத மர்மங்கள்...

Add a Comment
3 Comments
நெடு நாட்களாக நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்த ஒன்று.... உங்கள் பதிவை வரவேற்கின்றேன்..!
அடுத்த பதிவு எப்ப வரும் தோழரே
தெளிவான விளக்கத்துடன் அருமையா எழுதி இருக்கீங்க..