சமுத்திரம்... 

சமுத்திரம்! உயிர்களின் பிறப்பிடம், பரிணாமத்தின் முதல் தடம். கடலையே இதுவரை பார்த்திடாதவன் கண்களுக்கு வெறும் கடலே ஆச்சர்யம்தானே! அதைத்தாண்டி அதனுள் கொட்டிக்கிடக்கும், மூழ்கிக்கிடக்கும் கோடிக்கனக்ககான ஆச்சர்யங்களையும், மர்மங்களையும் பார்க்க, அறிந்துக்கொள்ள நமக்கு இந்த ஆயுசு பத்தாது!

எனக்கு தெரிந்து என் அறிவுக்கெட்டியவரை கடல் சார்ந்து, கடலுக்குள் அமிழ்ந்துகிடக்கும் மர்மங்களை, அல்லது இயற்கையை கொஞ்சமாக பகிர்கிறேன்.

முதலில், மனிதர்கள் உருவானதே கடலடியில்தான், அங்கிருந்து மெல்ல மெல்ல பரிணமித்துதான் நிலத்துக்கு தவழ்ந்து வந்தோம். உண்மையில் கடல்தான் நம் எல்லோருக்கும் தாய் மடி. இல்லை இல்லை.. உயிரினங்கள் அனைத்துக்கும் தாய்மடி...

சரி.. உயிரினங்களை (நம்மையும் சேர்த்துதான்) உருவாக்கிய கடலைப்பற்றி நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் ? நான் படித்ததை பார்த்ததை பகிர்கிறேன்.. மூச்சை பிடித்துக்கொண்டு மூழ்க தயாராகுங்கள்...

கடல் சார்ந்த சில உண்மைகள்....

1. நாம் வாழும் உலகில் 70% கடலால் சூழப்பட்டுள்ளது 

2.  பூமியில் வாழும் மொத்த உயிரினங்களில், 94 சதவீதம் கடல்வாழ் உயிரினங்களே!  அதில் மூன்றில் இரண்டு பங்கு  உயிரினங்கள் இன்னும் கண்டுபடிக்கப்படவில்லை.

3. கடலுக்கடியில் நிறைய ஆறுகளும், ஏரிகளும் உள்ளன! அவைகளை "Brine Pools" என்றழைப்பர்.

4. கடலுக்குள் நிறைய நீர்வீழ்ச்சிகள் உண்டு. அவைகளை "Hidden Waterfalls" என்பார்கள். உலகத்தின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி கடலுக்குள்தான் உள்ளதாம்... அது க்ரீன்லேண்ட்ஸ் மற்றும் ஐஸ்லேன்ட்க்கு இடையில் உள்ளது! 11,500 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டும் அருவியாம்! இதேபோல மொரீஷியஸ் அருகிலும் ஒரு ஹிட்டன் வாட்டர்பால்ஸ் உண்டு.

கடலுக்கு அடியில் உள்ள "Hidden Waterfall"

5. கடலரசனை போல பெரிய பணக்காரன் இந்த உலகில் யாருமே இல்லை...! ஆமாம் கடலில் கரைந்திருக்கும் தங்கத்தின் எடை மட்டும் 2 கோடி டன்களாம்! 

மனிதன் கடலுக்கடியில் எவ்வளவு ஆழம் வரை போயிருக்கிறான்? அவன் போன ஆழம்தான் கடலின் அதிகபட்ச ஆழமா?

இப்போதுள்ளது போல எந்த ஒரு உபகரணங்களும் இல்லாமல் மனிதன் கடலுக்குள் பயணித்த தூரம் 285 அடிகள் !

கடலுக்குள் என்ன இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை சங்க காலத்தில் இருந்தே மனிதனுக்குள் இருந்திருக்கிறது. தாய் மடியல்லவா ? தெரிந்துக்கொள்ளும் ஆசை வராமலா இருக்கும் ! 

கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாடில் கடலுக்கு அடியில் இருப்தைப்பற்றி “இதெல்லாம் இருக்கும், இப்படியெல்லாம் இருக்கக் கூடும்” என கற்பனை கலந்து சுவாரசியமாக எதையோ எழுதிவைக்க, அதன் பின் வந்த அலெக்சாண்டர் சுமார் கிமு 300 ல் கண்ணாடியில் பலூன் போன்ற உபகரணத்தை செய்துக்கொண்டு, அதன் மூலம் கடலுக்கடியில் சற்று தூரம் போய்விட்டு வந்தார்.

அவர் அங்கு கண்டதை எல்லாம் விரிவாக எழுதி வைக்க, அதன் பின் வந்தவர்களுக்கு கடலுக்கடியில் சென்று பார்க்கும் ஆசை அதிகரித்தது. பலர் முயற்சித்தனர்.. ஒவ்வொரு கட்டத்திலும் கடலை பற்றிய மனிதனின் அறிவு விஸ்தாரமாகிக்கொண்டே போனது. ஆரம்பத்தில் மிகச்சிரமப்பட்டு மூச்சையடக்கி உள்ளுக்கும் சென்று பார்த்த கடல்.... நவீன விஞ்ஞான வளர்ச்சியின் பிறகு சற்று எளிதாகிப்போனது !

என்னதான் இருக்கிறது கடலுக்குள் ?

கடலுக்குள் சில கிலோமீட்டர்கள் வரையில் இருப்பது நம் வாழும் நிலப்பரப்பின் மிச்சம்தான். (continental shelf) இதன் சராசரி ஆழம் 400 ல் இருந்து 600 அடிகள் வரைதான். அதன்பின்தான் நிஜக்கடல் ஆரம்பம் ஆகிறது, காலை பிடித்து சரேலென உள்ளிளுப்பது போல சொய்ங் என 15,000 அடிகள் வரை ஆழம் வரை கீழே இறங்குகிறது. இந்த இடங்களை abyss என்றழைப்பர். இது ஒரு பிரமாண்டமான சமவெளிப் பிரதேசம். “abyss”என்றால் படுகுழி, நரகம் என்கிற அர்த்தங்களும் உண்டு.

கடலுக்கடியில் செல்லச்செல்ல சூரிய ஒளி கொஞ்சம் கொஞ்சமாக மங்க ஆரம்பிக்கும். 1000 அடிவரை குத்துமதிப்பாக வெளிச்சத்தை பார்க்கலாம். அதற்கு மேல் கும்மிருட்டுதான். நினைத்துப்பாருங்களேன்.. நீருக்குள் இருட்டில் மூழ்கிக்கிடந்தால் என்னவாகும் என ?

கடலில் மூழ்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. விண்வெளி வீரர்களுக்கு கொடுப்பது போலவே இவர்களுக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும், இதற்கென ஸ்பெஷலாக உடைகள் தயாரிக்கப்படுகிறது, உப்பு நீரின் அடர்த்தி அதிகம் என்பதால், எளிதாக மூழ்கிவிட முடியாது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த jackques piccard  என்பவரும், அவர் நண்பரும் இணைந்து 1960  ஆம் ஆண்டு இந்த கடல் எவ்வளவுதான் ஆழம் என்று பார்த்துவிடலாம் என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் மூலம் கடலுக்குள் இறங்க. பல மணி நேரங்களுக்கு பிறகு தரையை தொட்டுவிட்டோம் என மேலுள்ள கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் அனுப்பினார்களாம் !

60 களில் உபயோகத்தில் இருந்த  நீர்மூழ்கி கப்பலின் மாதிரிப்படம் 

Jackques Piccard

அவர்கள் தரையை தொட்ட இடம்தான், mariyana trench என்றழைக்கப்படுகிறது! இதுதான் இதுவரை மனிதன் கடலுக்கடியில் சென்ற அதிகபட்ச தூரமாக இருந்தது...! 

கடலின் ஆழத்தை விளக்கும் படம் !

அவர்கள் கடலுக்கடியில் மூழ்கிய தூரம் எவ்வளவு தெரியுமா ? 35,808 அடிகள்!!!

---------------------------------------------------------------------------------------

Challanger Deep

தற்போது Challenger Deep என்று ஒரு இடம்வரை சென்றிருக்கிறார்கள்... அதன் ஆழம் 36,200 அடிகள். இதுதான் இப்போதைய டாப் ரெக்கார்ட்...!