குதிரைகள்  

கற்காலத்தில் மனிதன் எதிரிகளிடம் இருந்தும், கொடிய மிருகங்களிடம் இருந்தும் தப்பவேண்டி, அதற்கு வாகாக ஒரு மிருகத்தை பழக்க நினைத்தான், அவன் கண்காணித்ததில் மிக வேகமாக ஓடக்கூடியதாகவும் பழக்குவதற்கும் எளிதாகவும் இருந்த மிருகம் குதிரைதான்! அதை பழக்க ஆரம்பித்தது மனித நாகரீகத்தின் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு எனலாம்.

குதிரையை பழக்க ஆரம்பித்தபிறகுதான் மனிதன் தன் எல்லையை விஸ்தரிக்க ஆரம்பித்தான், நிறைய புது இடங்களை கண்டுபிடித்தான், வளர்ச்சி பெற்றான். சரி.. முன்னுரை போதும்...

குதிரைகள் தோற்றம், மற்றும் மனித நாகரீகத்திலும், வரலாற்றிலும் குதிரைகளின் பங்கு என்ன ? பார்ப்போம்...

இன்றிலிருந்து சுமார் நான்கரை கோடி வருடங்கள் முன்பு, நிறைய கால்களுடன் பூச்சியாக சுற்றிக்கொண்டிருந்த உயிரினம், மெல்ல பரிணமித்து, EOHIPPUS என்கிற உயிரினமாக உருவாகியது. "யோஹிபஸ்" பார்க்க குதிரையிலும் சேராமல், கழுதையிலும் சேராமல் ஒரு மாதிரி மான் போல இருந்தது.

EOHIPPUS

EOHIPPUS எலும்புக்கூடு 

அதன்பின் சிலகோடி ஆண்டுகள் எடுத்துக்கொண்டு மெல்லப்பரிணமித்து சிலபல கட்ட வளர்சிகளில் இன்றுள்ள குதிரையின் உருவெடுத்தது. (இப்போது நம்மிடம் உள்ள குதிரைகளின் இனங்கள் மொத்தம் 12)

குதிரையின் பரிணாம வளர்ச்சி 

குதிரைகளுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள பந்தம், மற்றும் புரிதல்களை பற்றி வராலாற்றில் ஏகப்பட்ட குறிப்புகள் உண்டு. தன் எஜமானனின் மன ஓட்டத்தை நுகரும் திறன் குதிரைகளுக்கு உண்டு, கணநேரத்தில் எஜமானன் மனநிலையை உணர்ந்து செயல்படும் அறிவு குதிரைகளுக்கு உண்டு. போரில் அடிபட்டு மயங்கியவர்களை மிகச்சரியாக வீட்டுக்கு கொண்டுவந்து சேர்த்த குதிரைகள் பற்றிய கதைகள் ஏராளம்,

குதிரையாக பரிணமிக்கும் முன் இருந்த நிலை 

வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் சில குதிரைகள். 

சேதக் (chetak)

ராஜபுத்திர மன்னன் மஹாராணா ப்ராதாப்பின் குதிரைதான் இந்த சேத்தக் ( பஜாஜ் ஸ்கூட்டர்க்கு இந்த பெயர் வைத்ததற்கும் இந்த குதிரைதான் காரணம் )

21 ஜூன் 1576 அன்று, முகலாயர்களுடன் ஏற்பட்ட சண்டையில் ரானாபிரதாப்பின் குதிரையான சேத்தக் படுகாயமடைந்தது, அந்த சூழலிலும் எஜமானருக்கு விசுவாசமாக உயிர் போகும்வரை போராடியது. அது செத்து வீழ்ந்த இடத்தில் கதறியழுத மகாராஜா, அது உயிர்விட்ட ராஜ்சமந்த் என்கிற இடத்தில் சேத்தக்குக்கு  சமாதி கட்டினார் ! இன்றளவும் சேத்தக்கை வழிபடுபவர்கள் உண்டு.

புசிபலஸ் (Bucephalus)

வரலாற்றில் முதன்முதலாக பிரபல அந்தஸ்து பெற்ற குதிரைதான் புசிபலஸ் !

இந்த புசிபலஸ் குதிரைதான் அலெக்சாண்டர் வெற்றிபெற்ற பல போர்களில் அவரை சுமந்துச்சென்றது. வரலாற்றில் இந்த குதிரையை பற்றி நிறைய குறிப்புகள் உண்டு, அதன் கம்பீரமே மிரட்டுமாம் காண்பவர்களை !

அலெக்சாந்தர் இந்த் குதிரையை தனக்காக தேர்ந்தெடுத்தபோது அவருடைய வயது 13, அப்போதிருந்து அந்த குதிரையை அவர் பிரியவே இல்லை ! இந்திய போர் வரை....

கிமு 326, இந்தியாவில் போரஸ் என்கிற மன்னனுடன் ஏற்பட்ட போரில், குதிரையை கொன்றால்தான் அலெக்சாண்டரை வீழ்த்த முடியும் என்று நினைத்த யாரோ குதிரையை சின்னாபின்னமாக்க, படுகாயங்களோடு செத்து செத்து வீழ்ந்தது புசிபலஸ்...!

அழுது புரண்ட அலெக்சாண்டர், அந்த இறந்த குதிரையின் நினைவால் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில், ஜீலம் நதிக்கரையில் ஒரு ஊருக்கே தன் குதிரையின் பெயரை சூட்டினான். பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிளவுபட்டபிறகு, அந்த பெயர் நீக்கப்பட்டு, அந்த நகருக்கு பாலியா என்ற பெயர் வைக்கப்பட்டது !

 

டிராவலர் ( Traveller)

ஜெனரல் ராபர்ட் என்பவரின் குதிரையின் பெயர்தான் "டிராவலர்" 

அமெரிக்க உள்நாட்டு போர் சமயங்களில் அவருக்கு உறுதுணையாக இருந்தது இந்த குதிரைதான். போர்களில் அந்த குதிரையின் சாகசத்தை பேசாத ஆட்களே கிடையாது, அவ்வளவு சாமர்த்தியம், அறிவு, தைரியம்.. அப்படி பல சிறப்பு மிக்க குதிரையான ட்ராவலரை, அதன் எஜமானரே சுட்டுக்கொன்றார். காரணம், அதற்கு உண்டான தீர்க்க முடியாத நோய். கொன்றுவிட்டு அழுது புலம்பியபடி அவர் சொன்னது.. " ட்ராவலரின் வலியை என்னால் தாங்க முடியவில்லை " !

 

மாரேங்கோ (marengo)

மாவீரன் நெப்போலியனின் குதிரையின் பெயர்தான் மாரேங்கோ, எகிப்த்திய குதிரை 1799 ல் பிரான்சுக்கு கொண்டுவரப்பட்டது. வரலாற்றில் இந்த குதிரைக்கென தனி பெயர் உண்டு, ஒவ்வொரு போரிலும் தன் எஜமானரை காப்பற்றும் விதத்தில் முன் யோசனையோடு செயல்படும் குதிரை என்று இதற்கு பெயர் உண்டு !

பல போர்களில் அது தன் புத்திசாலித்தனத்தை காட்டி நெப்போலியனுக்கு பிடித்த நண்பனாக வலம்வந்த இந்த குதிரை, புகழ்பெற்ற வாட்டர் லூ போரில் நெப்போலியன் தோற்ற பிறகு, எதிரிகள் வசமானது. ஏற்கனவே அதைப்பற்றி அறிந்திருந்த பிரிட்டன் அதிகாரி லார்ட் பீட்டர், மாரேங்கோவை கொல்லாமல் தன்னுடன் கொண்டுசென்றுவிட்டார் ! அதன்பின் இங்கிலாந்தில் வசித்த மாரேங்கோ 1831 ல் மரணமடைந்தது. இன்றும் இதன் எலும்புகூட்டை chelsea வில் அமைந்துள்ள national army musium இல் காணலாம் ! 

 

சார்ஜென்ட் ரேக்லஸ் ( Sergeant Reckless)

குதிரைக்கு பெயர் சார்ஜெண்டா ? ஆம். இந்த சார்ஜென்ட் ரேக்லஸ் குதிரை உலகப்புகழ் பெற்ற போர் குதிரைகளில் ஒன்று ! 

மங்கோலியாவில் இருந்து 1952 ல் அமெரிக்காவுக்கு கொண்டுவரப்பட்டதுதான் "சார்ஜென்ட் ரேக்லஸ்" அமெரிக்க கப்பற்படை அதிகாரிகளால் பயிற்றுவிக்கப்பட்டு, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு போர்க்கருவிகள் கொண்டுசெல்ல பயன்படுத்தப்பட்டது !

புத்திசாலி குதிரை என வரலாற்றில் அக்குதிரை இடம்பெற காரணம், பலமுறை ஆட்கள் இல்லாமல் தனியாக பொருட்களை சுமந்து சரியான இடத்திற்கு கொண்டுசென்றதுதான் ! ரேக்லசின் ரெக்கார்ட் தெரியுமா ? 1953 நடந்த ஒரு சண்டையின் போது, ஒரே நாளில் 51 முறைகள் தனியாக ட்ரிப் அடித்தது !

1954 ல் சர்வீசில் இருந்து ரிட்டயர்ட் ஆனது ரேக்லஸ், அதன் பின் பண்ணையில் மரியாதையாக வைக்கப்பட்டு, 1968 ல் இறந்து போனது. லைப் மேகசினில் "100 ஆல் டைம் அமெரிக்கன் ஹார்ஸ்" இடம் பிடித்தது ரேக்லசின் சாதனைகளில் ஒன்று !

குதிரைகள் புகழ் பாடுவதை இத்தோடு நிறுத்திவிட்டு, HORSE POWER என்று நாம் குறிப்பிடுகிறோம் அல்லவா ? அது என்ன என்று பார்ப்போம்.

அதென்ன ஹார்ஸ் பவர் ?

குதிரை சக்தியைத்தான் ஹார்ஸ் பவர் என்கிறோம். ஒரு குதிரை சக்தி என்பது ஒரு ஹார்ஸ் பவர். ஒகே! ஒரு குதிரை சக்தி என்பது என்ன? அதற்கு குதிரையை ஏன் அளவுகோல் ஆக்குகிறோம் ?

குதிரையின் வேகம், தோராயமாக 20 மைல்கல் / ஒருமணிக்கு, அதை சக்தியாக மாற்றும்போது ஒரு குதிரை சக்தி என்பது 746 வாட்கள். (746 watts) இந்த கணக்கீட்டின்படி 1500 (1492) வாட்கள் இரண்டு குதிரை  சக்தி எனப்படுகிறது.

இந்த கணக்கில்தான் மோட்டார் வாகனங்களுக்கும், எலெக்ட்ரிகல் எஞ்சினியரிங் துறைகளிலும் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது !

இனி குதிரைகளை பார்த்தால்... அதற்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள பிணைப்பை நினைத்துப்பாருங்கள்....